தமிழ்நாட்டில், ஜூலை 2008-ம் ஆண்டு  முதல்  பப்பாளி  மாவுப்பூச்சி, (பாராகாக்கஸ்மார்ஜினேட்டஸ்)  பப்பாளி,  முசுக்கொட்டை,  மரவள்ளி,  காட்டாமணக்கு,  காய்கறிப்பயிர்கள்,  பழப்பயிர்கள்,  பருத்தி  மற்றும்  பூக்கள்  ஆகியவற்றில்  மிகஅதிக  அளவில்  பாதிப்பை  ஏற்படுத்தியது.  மேலும்  பலவகை  களைச்செடிகளையும் தாக்கியது.  ஓம்புயிரி  வளர்ப்பு,  ஒட்டுண்ணி  உற்பத்தி  நுட்பங்கள்,  ஒட்டுண்ணிகளை  பாதுகாப்பாக  கொண்டுச்  செல்லுதல்  மற்றும்  ஒட்டுண்ணியை  வெளியிடும்  வழிமுறை  போன்ற  தரப்படுத்தப்பட்ட செயல்முறைகளைக் கொண்ட  பேரளவு  உற்பத்தி  தொழில்நுட்பத்தினால் அதிக  அளவு  அயல்நாட்டு  ஒட்டுண்ணி, (அசெரோபேகஸ்பப்பாயே)  உற்பத்தி  செய்யப்பட்டது.  மாவுப்பூச்சி  ஒட்டுண்ணியின் பேரளவு  உற்பத்தியானது,  கடந்த  2010-ம்  ஆண்டு  முதல்  தமிழ்நாடு  வேளாண்மை  பல்கலைக்கழகத்திலுள்ள வேளாண்மை மற்றும்  தோட்டாக்கலை  கல்லூரி,  36 ஆராய்ச்சி  நிலையம்  மற்றும்  14 வேளாண்  அறிவியல்  நிலையமத்தில்  ஒரே  சமையத்தில்  மேற்கொள்ளப்பட்டு தமிழகம்  முழுவதும்  வெளியிடப்பட்டது.  தோராயமாக  6.25 மில்லியன்  ஒட்டுண்ணிகளை  பெருக்கி,  ஒரு  தொகுதி  அல்லது  கிராமத்திலுள்ள ஒரு  வயலுக்கு  100 ஒட்டுண்ணி  என்ற  அளவில்  தமிழகம்  முழுவதும்  மாவுப்பூச்சி  பாதிப்புக்குள்ளான கிராமங்களிலுள்ள விவசாய  நிலங்களுக்கு  இலவசமாக  வழங்கப்பட்டது.  தமிழ்நாட்டில்,  பப்பாளி,  முசுக்கொட்டை  மற்றும்  மரவள்ளி  போன்ற  பயிர்களுக்கு,  ஒரு  வருடத்தில்  ரூ.435  கோடி  இழப்பை  குறைத்து  2010-ம்  ஆண்டு  வெற்றிகரமான  பாரம்பரிய  உயிரியல்முறைக் கட்டுப்பாட்டுக்கு மிக  சிறந்த  எடுத்துக்காட்டாக பப்பாளி  மாவுப்பூச்சியின் கட்டுப்பாடு  அமைத்துள்ளது.  மேலும்  இரசாயன  பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்தாமல் தவிர்த்ததன்  மூலம்  ரூ.  244.5 கோடி  சேமிக்கப்பட்டுள்ளது. 
                     |